செவ்வாய், 7 ஏப்ரல், 2015

மூலிகை ஜாலம்

பாடினே நின்னுமொரு ஜால வித்தை 
 பண்பாக சொல்லுகிற நன்றாய் கேளு 
ஆடியே இருளென்ற மூலி தன்னை 
 அப்பனே காப்பிட்டு பிடுங்கி வேரை 
நாடியே காதிலே வைக்கும் போது 
 நலமாக ஒரு பொருளை சொல்லி வைத்தாற் 
கூடியே யவ்வண்ண ரூபமாகும் 
 குணமாக வதன் பெருமை கூறக்கேளே 

கேளடா புலியாவாய் கரடி யாவாய் 
 கெடிதான குரங்காவாய்  மந்தியாவாய் 
நாளடா யெருமைமுத லெருதாவாய் 
 நலமான ஆனையோடு நாயுமாவாய் 
ஆவாய் நீ யாணாவாய் பெண்ணுமாவாய் 
 அப்பனே   ராஜனோடு குருவுமாவாய் 
தாவியே சித்தரென்ற முத்த ராவாய் 

ஆமப்பா இச் ஜால சுருக்கு மெத்த 
 ஆரறிய போகிறா ரருமை மெத்த 
காமப்பா புண்ணியருக் கெய்தும் பாரு 
 கன்மிகளுக் கென்னாலும் காணாதப்பா 
வாமப்பா போகருட கடாஷத் தாலே 
 வளமாக புலிப் பாணி பாடினேனே...
                                                                        - புலிப்பாணி ஜாலத்திரட்டு 
பொருள்:
                           இன்னும் ஒரு வித்தையை சொல்கிறேன் கேள், இருளி யென்ற மூலிகைக்கு காப்பு கட்டி அதன் வடக்கே போகும் வேரை எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளவும், அந்த வேரை காதில் வைத்து கொண்டு என்ன நினைக்கிறாயோ அதுவாகவே மாறலாம்.  
வேரை காதில் வைத்து நீ புலியாக வேண்டும் என நினைத்தால்  உருவம் பிறர் கண்களுக்கு புலியாக தெரியும். இப்படி காதில் வைத்து எந்த மிருகமாகவும் மாறலாம்.  ஆணும் ஆகலாம், பெண்ணும் ஆகலாம், ராஜாவாகவும், சித்தனாகவும் மாறலாம்.  
 இப்படி பட்ட இந்த மூலிகை பாவிகளுக்கு கிடைக்காது. இது போகரின் ஆசிர்வாதத்தால் புலிப்பாணியாகிய நான் பாடினேன்.


                      பகிர்வில் ர.சடகோபால்.BA  
                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...