ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஸ்ரீ தேவ கன்னிகா மஹா மந்திரம்

தியானம்: 
  மின்னலை யொத்த திருமேனி அழகும் இரண்டும் கரங்களில் பாரிஜாத மலரும் வெண்மையான ஆடையும் நவரத்ன கிரீடமும் தரித்து புன்முறுவலுடைய முக மண்டலமும் ஆகிய மோகன வடிவமான தேவ கன்னிகையை துதிக்கிறேன்.....
                
                   
                      

மூல மந்திரம்:
                       "ஓம் க்லீம் நமோ பகவதி சுரலோகவாகினி சர்வலோக வஸங்கரி க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சுர சுந்தரி தேவ கன்னிகாயை ஸ்வாக"

பூஜை முறைகள் :
                    பால் ,பழம் ,தேன்,வாசனை திரவியம் , சர்க்கரை பொங்கல், முதலியன வைத்து கணபதியை வணங்கி வடக்கு முகமாக அமர்ந்து 1008 உரு வீதம் 40 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகி தேவி பிரசன்னமாகும்..

இதன் பலன் :
                         முக்காலமும் சொல்லும் அஷ்டகர்மமும் சித்தியாகும். அறுபத்துநாலு சித்துகளும் ஆடலாம். மேலும் ஜால வித்தைகள், மை முறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.... 


                     பகிர்வில் ர.சடகோபால்.BA   





  

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஐந்தெழுத்து மந்திரம்

எல்லா அஞ்செழுத்தும் அஞ்சுமு கமாக 
 ஏகமாய் ஒரு நூற்று இருபத்தஞ்சாய் 
எதிரில்லா விஞ்சையாய்க் கலைக்கியானமாகி
 இதமதிதம் இரண்டுக்கும் முன்னேயாகி 
எதிரில்லாத் தோற்றுவித்து எழுவகையுமாகி
 எழுவகையின் தோற்றத்தில் லோகமாகி 
எதிரில்லா மந்திரத்தின் மகிமைதனை 
 எண்ணுகிறேன் ஒவ்வொன்றுக்கு இருபத்தஞ்சே 

"நமசிவாய" என்ற ஐந்தெழுத்தை ஐந்து முகமாக பிரித்து பார்க்க இருபத்தைந்தாம்.இதை ஐந்து முகமாக பார்க்க (25*5) நூற்று இருபத்தைந்தாகும். இதற்கு சமமான மந்திரங்கள் இல்லை எனலாகும். 
ஏழுவகை தோற்றமும் ஏழுவகை தோற்றத்தில் உருவான உலகமும் இதில் அடங்கும். 

அஞ்சுமுகமும் ஒவ்வோன்றுக்கு இருபத்தஞ்சும் 
 அறுபத்து நாலு சித்தும் ஆடி நிற்கும் 
பஞ்சமுக மாயிருந்த பூரணத்தைச் சேர்க்கும் 
 பராபரனாம் வாழ்நாளும் ஆறுதலம் பாயும் 
துஞ்சாது ஒருநாளும் வளர்ந்து தோன்றும்
 சுத்தருக்கு இந்தமுறை தொடர்ச்சியாகும் 
பிஞ்சாகும் காயாகும் பூவுமாகும் 
 பேசரிய பலகோடி அண்டமாமே ...
                                                                  - கருவூரார்                                                        

ஐந்து முகம் ஒவ்வோன்றிக்கும் இருபத்தைந்து அட்சாரமாகும் இதனால் அறுபத்து நான்கு சித்துகளும் உண்டாகும். இதுவே பூரணம் என்ற முழுமையை உண்டாக்கும் பராபரனான வாழ்நாளில் ஆறுதலமும் பாயும் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியே அன்றி குறைகள் வராது.
சுத்தமான மனது உடையவருக்கு இந்த முறை நன்மை அடைய செய்யும் .
பிஞ்சாகி,காயாகி,பூவுமாகும் . பலகோடி அண்டத்திற்கு மேலானது "நமசிவாய" எனும் ஐந்தெழுத்து..... 


                               பகிர்வில் ர.சடகோபால்.BA 
















       

பகவதி மந்திரம்

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற 
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.




பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும் 
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி 
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும். 
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும் 
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.
எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று 
வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.

     
                   பகிர்வில் ர.சடகோபால்.BA 

வசிய வீபூதி

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று 
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு 
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று 
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி 
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க் 
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே 

 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு 
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும் 
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி 
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து 
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி 
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி 
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே 

இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம் 
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும் 
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம் 
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று 
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர் 
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால் 
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள் 
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம் 

அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும். 
முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...

           
               பகிர்வில் ர.சடகோபால்.BA  


 





சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...