சனி, 2 மே, 2015

நெருப்பு வித்தை

மானப்பா மணத்தக்காளி சாறுகூட 
 மைந்தனே உத்தமாணியின் சாறுகூட்டி 
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
  வளமாக மத்தித்து வைத்துக்கொண்டு 
தானப்பா கைகாலில் தடவிக்கொண்டு 
  தன்மையாய் தணல்மிதிக்க தணலும் நீர்போல் 
ஏனப்பா யவ்விதமே செய்தாயானால் 
  இதமாகத் தணலதுவுந் தயங்குந்தானே...
                                                                               -புலிப்பாணி சித்தர் 

பொருள்: 
                       மணத்தக்காளி சாறும்,உத்தாமணி சாறும்,வசலை சாறு இம்மூன்றையும் ஒன்றாக கலந்து கைகளில் பூசி நெருப்பை எடுக்கவும்,அல்லது கால்களில் பூசி நெருப்பை மிதிக்கவும், கை கால்கள் சுடாது... நெருப்பானது நீர்போல இருக்கும். எந்த நேரம் விளையாடினாலும் விளையாடலாம்....

       
                பகிர்வில் ர.சடகோபால்.BA  





  

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...