திங்கள், 23 அக்டோபர், 2017

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்

வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
தொடர்புடைய படம்
மூல மந்திரம்:


"ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா"


பூஜை முறைகள்:

வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.


இதன் பலன்:

தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.


                                       பகிர்வில் ர.சடகோபால்.BA

உடல் கட்டு மந்திரம்

"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் கணுக்கால் இரண்டும் கணபதி காவல் முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல் வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல் உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன் காவல் கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல் நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல் உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை கார்க்க நம சிவாய "

இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.


                       பகிர்வில் ர.சடகோபால்.BA

வாலை தேவி மஹா மந்திரம்

வாலை தேவி என்பவள் சித்தர்களால் வணங்கி வழிபட்டு வந்த ஓர் பெண் தெய்வமாகும். அவ்வாறு சித்தர்களால் வழிபட்டு வந்த தேவியை நாமும் வழிபட மாந்திரிகம் என்னும் நூலில் தேவியின் மந்திரத்தையும் வழிபடும் முறையையும் கருவூரார் சித்தர் கூறியிருக்கிறார். கீழ் காணும் மந்திரத்தை ஒரு லட்சம் உரு ஜெபிக்க சித்தியாம்.


மூலமந்திரம்:

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹா"

இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. மேலும் இந்த தேவியால் சர்வ சுப காரியங்களும் சித்தியாகும். செல்வம் பெருகும். உடலில் உள்ள நோய்களெல்லாம் விலகி விடும்.


                                  பகிர்வில் ர.சடகோபால்.BA

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்

மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகும்.




மூலமந்திரம்:
"ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"


பூஜை முறைகள் :


பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும். பால்,பழம் கற்கண்டு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும்
பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.


குறிப்பு:
மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும்

                            பகிர்வில் ர.சடகோபால்.BA

மாயமாய் மறைவது எப்படி

ஒருவரை நாம் கண்டே பிடிக்க முடியாவிடில், அவன் மாயமாய் மறைந்து விட்டான் என உவமையாகச் சொல்வது வழக்கம். மற்றபடி நமது புராணக் கதைகளின் ஊடே ஒரு இடத்தில் இருந்து சட்டென மறைந்து வேறு இடத்தில் தோன்றுதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது.


நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா?


சாத்தியமே என்கிறார் அகத்தியர். "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. ஆமாம்.. நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் அஞ்சன மை ஒன்றைப் பற்றி கூறியிருக்கிறார்.


அதை எப்படி தயார் செய்வது?


சித்தியுள்ள அஞ்சனந்தா னொன்றுகேளு
திறமான தேவாங்கு காமரூபி
பத்தியுள்ள கருக்குருவி மூன்றின்பிச்சும்
பாலகனே ஒன்றாக கருக்கிக் கொள்ளு
சுத்தமுள்ள முட்டோட்டி லிட்டுக்கொண்டு
சூதுகப டில்லாமல் வருக்கும்போது
பத்தியுடன் தானுருகி மையாய்நிற்கும்
மார்க்கமுடன் கல்வமதில் வைத்துக்காணே




காணவே பேரண்டத் தயிலம்விட்டு
கடைந்தெடுக்கும் போதிலிருக் கண்ணிற்காணும்
ஊணவே ஓம்கிலிரங்ரங் கென்றேதான்
உத்தமனே தான்செபித்து வழித்துக்கொண்டு
பேணவே மதகரியின் கொம்பில்வைத்து
பிலமான சிமிழதனைப் பதனம்பண்ணி
பண்ணியந்த மையெடுத்துத் திலதம்போட்டு
கண்ணிறைந்த காட்சியிலே நின்றால்மைந்தா




காசினியி லுனதுருவைக் காணமாட்டார்
புண்ணியனே மனதுகந்த யிடத்தில்நின்று
போதமுடன் ஞானநெறி தன்னைப் பாரு
தன்னருளைத் தனதாகப் பார்த்துப்பின்பு
சங்கையுடன் திலதமதை யெடுத்துப்பாரே
என்னசொல்வேன் உனதுரு கண்ணிற்காணும்



தேவாங்கு, காமரூபி, கருக்குருவி ஆகியவற்றின் பிச்சுக்களை ஒன்றாக எடுத்து கருக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சுத்தமான முட்டை ஓட்டில் சேகரித்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போது அவை உருகி மை போலாகி இருக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மையை கல்வத்தில் இட்டு பேரண்டத் தயிலம் சேர்த்து கடைய வேண்டுமாம்.


கடைந்த பின் அதனை வழித்து எடுத்து, யானைத் தந்ததால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படி சேகரம் செய்யும் போது "ஓம் கிலி ரங் ரங்" என்ற மந்திரத்தினை செபித்துக் கொண்டே செய்திட வேண்டுமாம்.


உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உலகில் உள்ள யாரும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார். பின்னர் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று யோகம் தவம் போன்றன செய்து தன்னை அறிந்து கொள்ள கூறுகிறார். இந்த திலகத்தை அழித்து விட்டால் உருவம் பிறர் கண்களுக்குத் தென்படத் தொடங்கிவிடும் என்கிறார்.


இது ஒரு தகவல் பகிர்வே, இதன் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும் மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.




                                  பகிர்வில் ர.சடகோபால்.BA

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...