ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

சிவ மந்திரம்


செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு 
 சீரான யென்மகனெ கண்ணே சொல்வேன் 
செய்யப்பா தெங்கென்றுங்க் கிலிவா வென்றும் 
 செயங்கொள்ளாப் பிரபஞ்சம் வாவா வென்றும் 
கையப்பா ஐயுமேன்றும் ஸ்ரீறீங் கென்றும் 
 காமனையுந் தான்வென்ற ஈஸ்வராவாவா 
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால் 
 நோக்குமுன்னே சிவனங்கே வருவார் பாரே.
                                                                                    - கருவூரார் 
பொருள்: 
                   சிவ மந்திரத்தை கேள்.  "எங் கிலி வா செயங் கொள்ளா பிரபஞ்சம் வாவா" என்று  108 உரு ஜெபித்தால் நீ எதிர் பார்க்கும் முன்னே சிவன் உனக்கு துணையாக வருவார். 

                       பகிர்வில் ர.சடகோபால்.BA  

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஸ்ரீ வன துர்கா தேவி மஹா மந்திரம்

தியானம் 
               நீல மேனியும் முக்கண்ணுடைய முக மண்டலமும் நவரத்ன கிரீடத்தில் பிறை சந்திரனை தரித்து சிம்ம வாகனத்தில் அமர்ந்து எட்டு கரங்களில் சங்கு,சக்கரம்,திரிசூலம், டமருகம்,முசலம்,கேடயம்,அபயவரதம் தரித்து பாரிஜாத வனத்தில் பலகோடி யோகினி கணங்களுடன் கூடிய வனதுர்கா தேவியை வணங்குகிறேன்.
         
மூல மந்திரம்:                      
               "ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல ஜ்வல தூம்ர லோஷினி சண்ட ஸம் ஹாரி 
ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதி வன துர்க்காயை ஹீம் பட் ஸ்வாஹா"

பூஜை முறைகள் 
                                  வெள்ளிகிழமை அன்று வனத்தில் அமர்ந்து கொண்டு ஜெபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். பால்,தேன்,பொங்கல்,வடை,சுண்டல், வைத்து நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். செவ்வரளி புஷ்பம் பூஜைக்கு சிறந்தது. 1008 உரு வீதம் 9 நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

இதன் பயன் 
                          இந்த மந்திரம் சித்தியானால் உலகில் உள்ள பேய்,பிசாசு,பூதம் எல்லாம் பயந்து ஓடும். அஷ்டகர்மமும் சித்தியாகும். முக்காலமும் உணரலாம். சத்ருக்கள் அடங்கி போவார்கள். மேலும் இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களை உலகிலுள்ள எந்த தீய சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது.


                            பகிர்வில் ர.சடகோபால்.BA    






செவ்வாய், 7 ஏப்ரல், 2015

மூலிகை ஜாலம்

பாடினே நின்னுமொரு ஜால வித்தை 
 பண்பாக சொல்லுகிற நன்றாய் கேளு 
ஆடியே இருளென்ற மூலி தன்னை 
 அப்பனே காப்பிட்டு பிடுங்கி வேரை 
நாடியே காதிலே வைக்கும் போது 
 நலமாக ஒரு பொருளை சொல்லி வைத்தாற் 
கூடியே யவ்வண்ண ரூபமாகும் 
 குணமாக வதன் பெருமை கூறக்கேளே 

கேளடா புலியாவாய் கரடி யாவாய் 
 கெடிதான குரங்காவாய்  மந்தியாவாய் 
நாளடா யெருமைமுத லெருதாவாய் 
 நலமான ஆனையோடு நாயுமாவாய் 
ஆவாய் நீ யாணாவாய் பெண்ணுமாவாய் 
 அப்பனே   ராஜனோடு குருவுமாவாய் 
தாவியே சித்தரென்ற முத்த ராவாய் 

ஆமப்பா இச் ஜால சுருக்கு மெத்த 
 ஆரறிய போகிறா ரருமை மெத்த 
காமப்பா புண்ணியருக் கெய்தும் பாரு 
 கன்மிகளுக் கென்னாலும் காணாதப்பா 
வாமப்பா போகருட கடாஷத் தாலே 
 வளமாக புலிப் பாணி பாடினேனே...
                                                                        - புலிப்பாணி ஜாலத்திரட்டு 
பொருள்:
                           இன்னும் ஒரு வித்தையை சொல்கிறேன் கேள், இருளி யென்ற மூலிகைக்கு காப்பு கட்டி அதன் வடக்கே போகும் வேரை எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளவும், அந்த வேரை காதில் வைத்து கொண்டு என்ன நினைக்கிறாயோ அதுவாகவே மாறலாம்.  
வேரை காதில் வைத்து நீ புலியாக வேண்டும் என நினைத்தால்  உருவம் பிறர் கண்களுக்கு புலியாக தெரியும். இப்படி காதில் வைத்து எந்த மிருகமாகவும் மாறலாம்.  ஆணும் ஆகலாம், பெண்ணும் ஆகலாம், ராஜாவாகவும், சித்தனாகவும் மாறலாம்.  
 இப்படி பட்ட இந்த மூலிகை பாவிகளுக்கு கிடைக்காது. இது போகரின் ஆசிர்வாதத்தால் புலிப்பாணியாகிய நான் பாடினேன்.


                      பகிர்வில் ர.சடகோபால்.BA  
                   

சனி, 4 ஏப்ரல், 2015

அஞ்சனம்

ஜோதி விருட்சத்தின் வேர், அதன் பிசின், கஸ்தூரி, குங்குமப்பூ, கோரோசனை,பச்சைக் கற்பூரம்,புனுகு இவை வகைக்கு
 ஒரு குன்றி எடுத்து கல்வத்திலிட்டு, ஜோதி மர பட்டையின் குழித்தைலம் விட்டரைத்து , மைபோல் ஆனதும் எடுத்து கொம்பு டப்பியில் வைத்துப் பதனம் செய்யவும். ஜோதி மரத்தின் வேரை ஒரு புது சட்டியில் போட்டு கருக்கிக் கூட்டவும். ஜோதி மரத்தின் பட்டையை உலர்த்தி ஒரு மண்பானையில் போட்டு மேல் மூடி, சீலை மண் செய்து குழித்தைலம் இறக்கவும். இந்த மையை அஞ்சனா தேவி மூல மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து, ஒரு வெற்றிலையில் தடவி பார்த்தால் வெகு தூரத்தில் நடப்பதையும் காணலாம். இது தூர திருஷ்டி அஞ்சனம் எனப் பெயர்.

அஞ்சனா தேவி மூல மந்திரம்
                                                    " ஓம் ஸ்ரீம் ஷ்ரீம்  ஐம் க்லீம் நமோ பகவதி அஞ்சனாதேவி மஹா சக்தி சௌம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரி மமகார்யம் ஸாதயா ஹீபட் ஸ்வாஹா."


                  பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...