ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆரவல்லி சூரவல்லி

 ஆரவல்லி, சூரவல்லி : ஆண்களை அடிமைப்படுத்தியிருந்த அல்லிராஜ்ஜியம் பற்றி உங்களுக்கு தெரியுமா


ஒரு காலத்தில் இன்றைய கொள்ளேகாலம் தாலுக்காவுக்கும், பவானி தாலுக்காவுக்கும் எல்லையில் உள்ள பாலாற்றங்கரையில் உள்ள நல்லூர் கோட்டை என்ற பகுதியை கொடிகட்டி ஆண்டனர்.இன்றும் அக்கோட்டையின் சிதைந்த பகுதிகளை நல்லூரில் காணலாம். (அந்தியூர் - பர்கூர் - கர்கேகண்டி - நால்ரோடு - ஊகியம் - நல்லூர்)

 ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர். இவர்கள் சாகா வரம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களுக்கு பல்வரிசை என்றொரு மகள் இருந்தால். மிகவும் அழகானவள், அவளது நளினதிற்கும், கவர்ச்சிக்கும் மயங்காத ஆண்களே கிடையாது என்று கூறுவார்களாம். அப்பேர்ப்பட்ட அழகிக்கு திருமணம் செய்வதென்றால் சாதாரண காரியமா என்ன.


பல்வரிசையை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆரவல்லி, சூரவல்லி வைக்கும் போட்டிகளில் வெற்றிப் பெற வேண்டும். இரும்பு குண்டை பொடியாக்க வேண்டும், இரும்பு கம்பியை ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் என்ற கடினமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர் தான் பல்வரிசையின் கரம்பிடிக்க முடியும்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்தது பற்றி நீங்கள் கேட்டிராத கதை
   இந்த போட்டியில் கலந்துக் கொண்டு பாதியிலேயே பின் வாங்கினாலோ அல்லது தோல்வியுற்றாலோ அடிமைகளாக சிறையில் அடைக்கப்படுவார்கள். இதன் காரணத்தினால் தான் இவர்களது இராஜ்ஜியம் அல்லி ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. இவர்களுக்கு முடிவு கட்டவும் ஒரு நேரம் வந்தது, ஒரு வீரன் வந்தான்.....


7 சகோதரிகள் ஆரவல்லி, சூரவல்லி இருவர் மட்டும் அல்ல, மொத்தம் ஏழு பேர் கொண்டவர்கள் இந்த சகோதரிகள். இவர்களில் ஆரவல்லி, சூரவல்லி பெயர்கள் மட்டுமே பல கல்வெட்டுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆரவல்லயும், சூரவல்லியும் சாதாரண  ஆட்கள் இல்லை. சாகாவரம் பெற்றது மட்டுமில்லாது, மாய தந்திரங்கள், சூனியம், மாந்திரீகம் போன்ற செயல்களும் நன்கு அறிந்தவர்கள்.

அழகு பதுமையான பல்வரிசையை திருமணம் செய்யும் ஆசையில் வந்த பல இளவரசர்கள் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினரிடம் அடிமைகள் ஆயினர்.

பீமனின் வருகை

 ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளின் அட்டகாசத்தை கேள்விப்பட்ட பீமன், இவர்களது அள்ளி ராஜ்ஜியத்திற்கு முடிவுக்கட்ட கிளம்பி வந்தான்.

ஆரவல்லி, சூரவல்லி வைத்த மூன்று போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிக்கண்ட பீமன். ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டிய கம்பியை இரண்டாக தான் உடைக்க முடிந்தது. அதனால், பீமனும் தோல்வியுற்றான் என்று கூறி சிறையில் அடைத்தனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர்.

பெருச்சாளியாக மகாவிஷ்ணு

 சிறையில் இருந்த பீமனைக் காப்பாற்ற பெருச்சாளியாக உருமாறி மகாவிஷ்ணு சென்றார். அப்போது தர்மர் குறிக்கிட்டு, முடிந்தால் போட்டியில் மோதி ஜெயித்து வாருங்கள் என்று கூறி தடுத்துவிட்டார். மகாவிஷ்ணுவும் பீமனை சிறையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.

வான சாஸ்திரம்

மகாவிஷ்ணுவான கண்ணபிரான் சகாதேவனை கூப்பிட்டு சாஸ்திரத்தை எடுத்து பார்க்க சொன்னார் , அந்த பெண்ணின் கணவன் அல்லி முத்து என்று இருந்தது . அவன் துரியோதனின் தங்கையின் பிள்ளை அவர் தருமரிடம் பாசமாக இருப்பவர் தகவல் கூறி அழைத்துவரச் சொன்னார்கள் பின்பு அவனை அழைத்து கொண்டு துறவியிடம் சென்று ஆசி பெற்று முட்டை வாங்கி கொண்டு போட்டிக்கு அனுப்பினார்கள் . அல்லி முத்துக்கு இரும்பு கம்பத்தை வெட்ட மகாவிஷ்ணு சொல்லி கொடுத்தார் .கம்பத்தை வெட்டும் போது முதலில் கம்பத்தை U போல் வளைத்து பின்பு வெட்ட சொன்னார் .அல்லிமுத்து எல்லா போட்டிகளிலும் ஜெயித்துவிட்டான்.

பேசியபடியே பெண்ணை மணம் முடித்து எங்கள் ராஜியத்திலேயே இரு என்றனர் .அல்லிமுத்து உங்கள் ராஜ்யமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்றான். நம்மை மதிக்கவில்லையே என்று பெண்ணிடம் விஷம் கலந்த பலகாரத்தை கொடுத்து உன் கணவனுக்கு மட்டும் ஊருக்கு செல்லும் வழியில் கொடு என்றனர் பெண்ணுக்கு பலகாரத்தில் விஷம் உள்ளது தெரியாது வழியில் தின்ன கொடுத்தாள் தின்னவுடன் அவன் உடம்பு நீலம் பாய்ந்தது. அதைபார்த்து பல்வரிசை கதறி அழுதாள்.துறவியிடம் வரம் பெற்றதால் அல்லிமுத்து இறக்கவில்லை . ஆனால் அவன் நான் இறந்ததற்கு சமம் என்றான்
 அப்போது பாடிய பாடல் தான் இப்போது சுடுகாட்டிற்கு செல்லும்போது வெட்டியான் பாடுவது . 

இதை கேள்விப்பட்ட அர்ஜுனன் கோபமடைந்தான் அவர்களை வீழ்த்த சென்றான் . ஆரவல்லியும் சூரவல்லியும் சாகாவரம் பெற்றவர்கள் அர்ச்சுனன் பாணம் விட்டால்தான் இறப்பார்கள் 



வனபத்ரகாளி அம்மன் அருள்புரிதல் வழியில்:





வனபத்ரகாளி அம்மன் அருள் பெற்று, அல்லி ராஜ்ஜியத்தை தோற்கடிக்க முற்பட்டான் அல்லிமுத்து. உடன் அர்ஜுனனும் சென்றதாக கூறப்படுகிறது.


அர்ஜுனன் வருவதை கண்டு பயந்து கேரளத்திற்கு அல்லி சகோதரிகள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின் அல்லிமுத்து, அடிமைகளாக இருந்த அரசர்களை விடிவித்து ஆண்களை காப்பாற்றினான்.

கேரளாவில் மாந்திரீகம் வளர்ந்ததற்கு காரணம் இவர்கள் தான் என்று இந்த சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

குறிப்பு :


வனபத்திரகாளி அம்மன் திருக்கோவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இல் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..
                                     பகிர்வில் ர.சடகோபால் .BA

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...