ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி மஹா மந்திரம்

த்யானம்  
                  இளஞ்சுரியனை போன்று பிரகாசிப்பவளும் சந்திரனைக் கிரீடத்திலணிந்தவளும் உயர்ந்த நகில்களையுடைய வளும் பூத்த முகமுடையவளும் வர முத்திரை,பாசம்,அங்குசம்,அபய முத்திரை ஆகியவற்றை  கரங்களில் தரிப்பவளும் ஆகிய புவனேஸ்வரி தாயை த்யானம் செய்கிறேன் .



மூல மந்திரம் :
                                   "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி புவனேஸ்வரி ஸ்ரீம் ஹ்ரீம் ஹம் நம ஸ்வாகா"  

பூஜை முறைகள் :
                                   பால்சாதம் ,தேன்,கற்கண்டு,வாசனை திரவியம் ,மல்லிகை மலர் போன்றவை வைத்து 21 நாள் 1008 முறை ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும்....

இதன் பயன் :
                           முக்காலமும் உணரலாம் வசியம்,மோகனம்,சித்தியாகும். எப்பேற்பட்ட நோய்களுக்கும் விபூதி போட குணமாகும் 


                      பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 26 செப்டம்பர், 2015

வசிய மை

 போக்கான இன்னமொருவ சியங்கேளு 
 புகழ்பெரிய ஆவின்கொரோச னம்கற் பூரம் 
வாக்கான கண்டனிட மூலி வேரும் 
 மகத்தான சந்தனமும்பு னுகுங் கூட்டி 
தாக்கான மந்திரம் ஓம் ரீங் வசி 
 சர்வமோகி னிவசிய மென்றே யோது 
தேங்கான தில்லைநடமாடும் போல செய்து 
 வெல்லாநீ தேடிநின்றுக தரும் பாரே 
                                                                        அகத்தியர் பரிபூரணம் 400
பொருள்:
                  இன்னுமொரு வசியத்தை கேட்பாயாக, கோரோசனம் கற்பூரம் விஷ்ணு கரந்தை வேர்,சந்தனம்,புனுகு அத்தனையும் கூட்டி மை போல அரைத்து வைத்து கொள்ளவும், பிறகு "ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசிய " என்று ஓதினால் இவ்வுலகில் அனைத்தும் வசியமாகும்..


          பகிர்வில் ர.சடகோபால்.BA 



சக்தி சாரணை

 பொற்றியென்ற சக்திசா ரணையை வாங்கப்
 பொருந்தியதொர் சங்கரம நாளில்சென்று 
ஊற்றியென்னும் நூல்கட்டி மந்திரந்தான் 
 உரைத்திடவே ஓம்பரமா பரமானந்தி 
மாற்றி மகா சக்தி கமல வல்லி 
 மாதாவே என்று சொல்லி சமூலம் வாங்கி  
நெற்றியெனும் பொடியாக்கி நித்தங்கொள்ள
நிலைத் தெந்த ஆயுதமும் தைத்திடாதே 
                                                                           -கருவூரார் 
பொருள்:
                  சக்தி சாரணையை எடுக்க சங்கரம நாளில்  சென்று நூலால் காப்பு கட்டி ."ஓம் பரமா பரமானந்தி மகா சக்தி கமலவல்லி மாதாவே " என்று மந்திரம் சொல்லி சமுலமாக எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் உண்ண,எந்தவித ஆயுதமும் உடலில் தைக்காது [உடலில் ஆயுதம் பாயாது]


                  பகிர்வில் ர.சடகோபால்.BA 
  

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பாதாள அஞ்சனம்

பாதாள அஞ்சனம் என்பது புதையல் எடுக்க பயன்படுவது ஆகும். 
குப்பைமேனி வேர்              வெள்ளைசாரனை வேர் 
வெள்ளெருக்கன் வேர்       வெள்ளைகாக்கணம் வேர் 
வெள்ளைவிஷ்ணு காந்தி வேர் 

இவை ஐந்தையும் முறை படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமால் பிடுங்கி, தீயில் கறுக்கி எடுத்து வைத்துகொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம்,குடல் போக்கி குழித்தைலம் எடுத்து, மேல் கண்ட மூலிகை வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டன் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன் பிறகு புனுகு,கோரோசனம்,பச்சைகற்பூரம்,குங்குமபூ ,கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் அடந்ததை தெரிந்துகொள்ள கல்வத்தின் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அரைக்க அது மையில் தெரியும்..

இதற்கு பூஜை மந்திரம் எதுவும் நான் இங்கு கூறவில்லை. இதை ஒரு பகிர்வாக மட்டுமே பகிர்கிறேன்....


                        பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...